Friday 31 January 2014

2013 - தமிழ் காமிக்ஸ் உலகில் மறக்க முடியாத ஒரு ஆண்டு (பாகம் 1)

காமிரேட்ஸ்,

சென்ற ஆண்டாகிய 2013 நம்முடைய காமிக்ஸ் வாழ்வில் ஒரு மறக்க முடியாத ஆண்டாக மாறியுள்ளதை நாம் அனைவருமே அறிவோம். 24 புத்தகங்கள், ஒரு மிகப்பெரிய ஸ்பெஷல் வெளியீடு, ஒரு டெக்ஸ் வில்லர் ஸ்பெஷல் என்று எடிட்டர் வீடு கட்டி விளையாடிய ஆண்டு இந்த 2013. அதனைப்பற்றைய ஒரு முழுமையான விமர்சனத்தை முன்வைப்பதற்க்கு முன்பாக எடிட்டர் நம்மிடம் கேட்ட கேள்விகளுக்கு இந்த பதிவில் பதில் சொல்லிவிடலாமே?

உண்மையை சொல்வதெனின் எடிட்டரின் இந்த பதிவை படித்த பின்புதான் இதற்க்கான பதில்களை டைப் செய்து வைத்துவிட்டு அவற்றை அனுப்பாமலே விட்டது நினைவுக்கு வந்தது. ஆகையால் கேள்விகளும், அதற்க்கான என்னுடைய பதில்களும் இங்கே:

(1) 2013ன் டாப் 3 இதழ்கள்;

2013 July Lion Comics All New Special 2013 June Sunshine Library Lucky Special 2013 Jan Muthu Comics Never Before Special 2013 Nov Sunshine Library Tex Willer Diwali Special

1. ஆல் நியூ ஸ்பெஷல் (பல வருடங்களாக தொடர்ந்து சென்றுக்கொண்டு இருந்த பாதையில் இருந்து விலகி பயணிக்க முடிவெடுத்த அந்த ஒரு காரணம் மட்டுமே அந்த இதழை பிடிக்க தலையாய காரணீ)

2. லக்கி ஸ்பெஷல் (பழைய நண்பனை மீண்டும் கண்ட சந்தோஷம்)   

3. நெவர் பிஃபோர் ஸ்பெஷல் - தீபாவளி ஸ்பெஷல் டெக்ஸ் வில்லர்

(இரண்டுமே சம அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. ஆல் நியூ ஸ்பெஷலில் கல்யாண வீட்டில் சந்திக்கும் விருந்தினர்களைப்போல எல்லா ஹீரொக்களையுமே ஒரே இடத்தில் பார்த்த சந்தொஷம். டெக்ஸ் வில்லரின் தீபாவளி ஸ்பெஷலைப் பொருத்தவரையில் இருவது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு குண்டு ஸ்பெஷல் இதழை கையில் எடுத்தால் என்ன திருப்தி தருமோ அந்த சந்தோஷம் கிடைத்தது. உண்மையை சொல்வதெனின் இந்த இதழை படித்த நேரத்தைவிட கையில் வைத்து ரசித்த நேரமே அதிகம்).

 

(2) 2013ன் சொதப்பல் எது?

அழகான குழந்தைகளுள் சொதப்பல் எது? என்பது போன்ற கேள்வி இது. பூந்தோட்டத்தில் மோசமான மலர் எது? என்று சொல்ல முடியுமா என்ன? அதுபோலத்தான்.

இருந்தாலும் தர வரிசை பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தவை என்று பட்டியலிட முடியுமே தவிர, சொதப்பல் என்றல்ல. அப்படியாக தர வரிசை பட்டியலில் கடைசியாக வந்தவை இவையே:

2013 Dec Sunshine Library Vengaiyin Seetram 2013 June Lion Comics Bootha Vettai 2013 Jan Lion Comics Sigappai Oru Soppanam

வேங்கையின் சீற்றம்

பூத வேட்டை

சிகப்பாய் ஒரு சொப்பனம் (இந்த Tex கதைகள் ஒரு குறிப்பிட்ட பக்கங்களுக்கு பிறகு அலுப்பையே தந்தன, அதனாலேயே இந்த முடிவு.

 

(3) 2013ன் சிறந்த அட்டைப்படங்கள் யாவை?

2013 Apr Sunshine Libray Tiger Special 2013 Nov Sunshine Library Tex Willer Diwali Special 2013 Oct Lion Comics Irathap Padalam

1. டைகர் ஸ்பெஷல் (விளக்கம் வேண்டுமா என்ன?)

2. டெக்ஸ் வில்லர் தீபாவளி ஸ்பெஷல் (ஒரு நாஸ்டால்ஜியா எஃபெக்ட்)

3. இரத்தப்படலம் (இந்த அட்டை பிடிக்க கதையும் ஒரு காரணம்)

 

(4) 2013னில் இன்னும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வந்திருக்க வேண்டிய அட்டைப்படங்கள்;

2013 Sept Muthu Comics Aadhalinaal adhagalam seyveer 2013 Nov Muthu Comics Oru Sippaiyin Suvadugalil 2013 Jan Muthu Comics Never Before Special

1. ஆதலினால் அதகளம் செய்வீர் (வண்ணக்கலவை செய்த குளறுபடி)

2. ஒரு சிப்பாயின் சுவடுகளில்… (லோ ரெஷல்யூஷன் படங்கள்).

3. நெவர் பிஃபோர் ஸ்பெஷல் – இந்த சாதனை மலரில் இன்னமும் ஏதோ குறையுது)

 

(5) 2013ன் டாப் நாயகர்(கள்) யார்?

1. லார்கோ வின்ச் (விளக்கம் வேண்டுமா என்ன?)

2. வேய்ன் ஷெல்டன் (விளக்கம் வேண்டுமா என்ன?)

3. XIII (விளக்கம் வேண்டுமா என்ன?)

 

(6) விரும்பதாகாத கதை வரிசைகள் ஏதேனும்….?

குறை என்று சொல்லவில்லை எனினும் ஒரே பாணியிலான டெக்ஸ் கதைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோமோ? என்ற எண்ணம் சமீப காலமாக மேலோங்கி வருகிறது.

அதைப்போலவே டையபாலிக் கதைகளிலுமே கூட திரைக்கதை மிகவும் துல்லியமாக அமைக்கப்பட்டு இருக்கும் சுமாரான படம், ஹிட் ஆவதைப்போல இந்த தொடரும் திரைக்கதை மசாலா அம்சங்களுடன் மிகச்சரியான கோர்வையில் அமைந்து இருந்தாலுமேகூட மிகவும் சாதாரண கதைகள் தான் இவை என்று ஒவ்வொரு கதையின் முடிவிலும் தோன்றுகிறது.

அதைபோலவே கேப்டன் ப்ரின்ஸின் கதைகளின் முடிவு திடீரென்று வருவதை 25 ஆண்டுகளாக பொறுத்துக்கொண்டு வருகிறோம். மிகவும் நிதானமாக ஆரம்பிக்கும் அவரது கதைகள், ஒரு அசாதாரண வேகத்துடன் பயணிக்கும். முடிவோ சொல்லி வைத்தது போல, சட்டென்று வந்துவிடும்.

 

(7) கருப்பு வெள்ளை இதழ்கள் பற்றி…?

கண்டிப்பாக தேவை.

அதே சமயம், வண்ண இதழ்களுக்கும் கருப்பு வெள்ளை இதழ்களுக்கும் தயாரிப்பு செலவு கிட்டதட்ட ஒரே அளவுதான் என்ற இப்போதைய சந்தை நிலவரம் தான் நடைமுறை சிக்கல்களை உருவாக்குகிறது. அடுத்த ஆண்டாவாது (2015) இந்த நிலைமை மாறினால்…. அப்போது சி.ஐ.டி. ராபின், மர்ம மனிதன் மார்ட்டின், டேஞ்சர் டையபாலிக் போன்ற நாயகர்களுக்கு தொடர் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். அடுத்த ஆண்டில் கருப்பு வெள்ளை இதழ்கள் சாத்தியம் எனில் ஒரு புதிய வரிசையை துவக்குவதில் தவறே கிடையாது.

 

(8) 2014ன் கதை தேர்வுகள் பற்றி…….?

சில குறிப்பிட்ட கருப்பு வெள்ளை கதா நாயகர்கள் மிஸ் ஆகிறார்கள். உதாரணமாக மாடஸ்டியின் கதை வரிசையில் மிகச்சிறந்த கதைகள் பலவும் உண்டு. உதாரணமாக மாட்ஸ்டியின் உதவியாளர் வெங் பற்றிய கதை, டார்ரண்டின் உதவியாளர் சினம் கொண்டு வஞசம் தீர்க்க செல்லும் கதை என்று பல. அவற்றில் சிலவற்றை வெளியிடலாமே?

அதைப்போலவே தான் ரிப் கிர்பி + பில் காரிகன் கதைகள். இன்னமும் வெளியிடப்படாத கதைகள் இந்த வரிசைகளில் பலவும் உண்டு. ஆகையால்……..Judgment is Reserved Till We Read Those stories.

 

(9) 2013ல் டெக்ஸ் கதைகள் ஒவர்டோஸா?

மூன்று வேளை சாப்பிடுவது ஒவர்டோஸா? என்று கேட்பது பொலிருக்கிறது இந்த கேள்வி.

கண்டிப்பாக இல்லை,

இப்போது மட்டுமல்ல,

எப்போதுமே.

 

(10) இரத்தப்படலம் – புதிய அத்யாயம் எப்படி?

ஒரே ஒரு வார்த்தை – சிறப்பு.

இரண்டு வார்த்தைகளில் சொல்வதெனின் மிகவும் சிறப்பு.

 

(11) நம்மிடம் இருக்கும் கதை வரிசைகளை தவிர ரசிக்க விரும்பும் புதிய கதை வரிசைகள்?

1. சைன்ஸ் பிஃக்‌ஷன்.

2. ஃக்ராபிக் நாவல்கள்

3. திகில் கதைகள்.

 

(12) 2013 நிறை குறைகள்…..

நிறைகள்;

  1. எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்த கதைவரிசைகள்
  2. தாமதப் பேயை விரட்டியது
  3. மாதம் முதல் வாரத்திலேயே புத்தகங்களை கொண்டு வந்தது

குறைகள்;

  1. திடீர், திடீரென்று கதைகளை, வரவேண்டிய வரிசைகளை மாற்றியது
  2. வருகிறது என்று விளம்பரப்படுத்தி விட்டு பின்னர் அவற்றை வெளியிடாமல் விட்டுவிட்டது (ஆல் நியூ ஸ்பெஷல் முதலில் விளம்பரப்படுத்தப்பட்ட கதைகள், டைஜெஸ்டுகள் இதர, இதர)
  3. பிரதான நாயகர்களின் சுமாரான கதைகளை வெளியிடுவது (உதாரணம் லக்கிலூக், மாடஸ்டி)

விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம் காமிரேட்ஸ்.